இன்றைய செய்திகள்

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🎩🎩தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு
👉தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. செப். 14ம் தேதி நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள், 57 நாட்களுக்குள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் www.tnpscresults.tn.gov.in இணையதளத்தில் வெளியாகி உள்ளது. வனக் காவலர், துணை வணிக வரி அலுவலர், வனவர் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வு நடைபெற்றது.
🎩🎩உலகிலேயே முதன்முறையாக 3டி தொழில்நுட்பத்தில் மனித மூளையை ஆவணப்படுத்தியது சென்னை ஐஐடி: நிச்சயம் நோபல் பரிசு கிடைக்கும் என ஐஐடி இயக்குனர் காமகோடி நம்பிக்கை
🎩🎩வளரறி மதிப்பீடு அ மற்றும் ஆ (FA(A&B))முடிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 23 வரை நீட்டிப்பு.
🎩🎩நாளை நடைபெறுவதாக இருந்த trust exam கனமழையின் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
🎩🎩பள்ளி பாடத்திட்டத்தில் குழந்தைகள் உதவி எண் குறிப்பிடக் கோரிய மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
🎩🎩தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை 47 சதவீதத்திற்கு மேல் உயர்வு : அமைச்சர் கோவி.செழியன் பெருமிதம்
🎩🎩அரசுப் பள்ளிகளில் உள்ள Administrator Cum Instructor பணியிடங்களை கணினி அறிவியல் பட்டம் பெற்ற கல்வியியல் பட்டதாரிகளைக் கொண்டு நியமிக்க ஓ.பன்னீர்செல்வம் அரசை வலியுறுத்தல்.
🎩🎩இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க விசா வழங்குவது 38% குறைந்தது
🎩🎩IIT களில் சேரும் தமிழக மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு; அமைச்சர் மகேஷ்
🎩🎩திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும்போது மலை மீது ஏற பக்தர்களுக்கு அனுமதியில்லை என நிலச்சரிவு ஏற்பட்டதை கவனத்தில் கொண்டு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு.
🎩🎩விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் 3ஆம் கட்ட அகழாய்வு பணி. நீல நிற கண்ணாடி மணி, சுடு மண்ணால் ஆன பதக்கம் கண்டெடுப்பு.
🎩🎩இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விரைந்து விடுவிக்க அந்நாட்டு அரசிடம் இந்தியா கோரிக்கை இலங்கை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரிடம் நேரில் கோரிக்கை விடுத்த இந்திய தூதர் சந்தோஷ் ஜா.
🎩🎩தற்கொலை செய்துகொள்ளும் முன் நீதித்துறையை சாடி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதிய கர்நாடக ஐடி ஊழியர். உயிர்வாழும் யாராலும் நீதிமன்றத்திற்கு எதிராக பேச முடியாத நிலை நாட்டில் உள்ளதாக வேதனை.
🎩🎩காஷ்மீரில் ஜம்மு, ஸ்ரீநகர் இரு நகரங்களையும் தலா 6 மாதங்கள் தலைநகராக வைத்திருக்கும் நடைமுறை மீண்டும் அமலுக்கு கொண்டு வரப்படும் என முதலமைச்சர் உமர் அப்துல்லா அறிவிப்பு. கடந்த ஆளுநர் ஆட்சிக்காலத்தில் கைவிடப்பட்ட நடைமுறையை மீண்டும் கொண்டு வர முடிவு.
🎩🎩ஒரே நாடு, ஒரே தேர்தல்!
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
🎩🎩"உருவாகிறது புதிய காற்றழுத்தம்"
"வரும் டிச.15ம் தேதி அந்தமான் கடலோர பகுதியை ஒட்டி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்; புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது"
-வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்
🎩🎩உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை
14வது சுற்றில் நடப்பு சாம்பியனான சீன வீரர் டிங் லிரென்னை வீழ்த்தி வெற்றி பெற்றார் குகேஷ்
இளம்வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார் 18 வயதான குகேஷ்.
🎩🎩 LIC பொன்விழா கல்வி உதவி தொகை திட்டம்: டிச.22-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
🎩🎩’கலைஞர் கைவினை திட்டம்’ - 25 வகையான தொழில்களுக்குக் கடன் வழங்கப்படும் - விண்ணப்பிக்கலாம்.
🎩🎩"பி.எஃப் பணத்தை ஏடிஎம்களில் எடுக்கும் வசதி வருகிற மே மற்றும் ஜூன் 2025-க்குள் அமல்படுத்தப்படும்"
"டெபிட் கார்டை போல காட்சி அளிக்கும் ஒரு ATM கார்டு இதற்காக EPF சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும்"
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை அடுத்த ஆண்டு முதல் ஏடிஎமில் (ATM) பணமாக எடுப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை.
தகவல் தொழில்நுட்ப அமைப்பை மேம்படுத்தி துரித சேவைக்கு தொழிலாளர் அமைச்சகம் ஏற்பாடு.
பிஎஃப் உரிமை கோருபவர், காப்பீடு செய்த நபர், ஏடிஎம் வாயிலாக பணம் எடுக்க நடவடிக்கை. - தொழிலாளர் அமைச்சகம்.
வங்கி துறையில் உள்ள தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு போன்று இஎஃப்-ல் கொண்டுவர நடவடிக்கை. 🎩🎩வைக்கம் போராட்ட 100ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் இணைந்து நேற்று திறந்து வைத்தனர்.
🎩🎩ஆந்திராவில் தனியார் மது கடைகள் திறக்கப்பட்ட 55 நாட்களில் ரூ.4,677 கோடிக்கு மது விற்பனை
ஆந்திராவில் தனியார் மூலம் மது விற்பனை தொடங்கிய கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் 9ம் தேதி வரை 55 நாட்களில் ரூ.4,677 கோடிக்கு மதுபானம் விறபனையாகியுள்ளது.
இதில் 61.63 லட்சம் மது பெட்டிகளும், 19.33 லட்சம் பீர் பெட்டிகளும் விற்பனையாகி உள்ளது.
🎩🎩ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு
👉“ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ள 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற கொடூரமான மசோதா,
👉பிராந்தியக் குரல்களை அழித்து, கூட்டாட்சியை சிதைத்து, ஆட்சியை சீர்குலைக்கும்.
👉அனைவரும் ஒன்றிறைந்து நம் ஜனநாயகத்திற்கு எதிரான இந்த தாக்குதலை தடுத்து நிறுத்துவோம்”
🎩🎩ஒன்றிய பாஜக அரசு ஒரு ரூபாய் கூட பேரிடர் நிதியுதவி வழங்காமல் கல் நெஞ்சம் படைத்ததாக உள்ளது : திமுக எம்பி கனிமொழி தாக்கு.
🎩🎩ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை முழு பலத்துடன் போராடி தடுத்து நிறுத்துவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
🎩🎩பதிவுத்துறையில் தமிழ்நாடு அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித்தந்த அலுவலர்களுக்கு அமைச்சர் மூர்த்தி பாராட்டு
🎩🎩கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை 18 மாதம் காலத்தில் 5,020 அறுவை சிகிச்சைகள் செய்து மாபெரும் சாதனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
🎩🎩மருத்துவமனையில் தீ விபத்து - 6 பேர் உயிரிழப்பு
திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து
திண்டுக்கல் தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், 6 பேர் மட்டுமே உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தகவல்
3 பேருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல். 🎩🎩🎩🎩🎩🎩🎩🎩🎩🎩
🌹🌹எல்லா கடைகளிலும் வாழைப்பழத்தை ஏன் தொங்க விடுகிறார்கள் என்று என்றாவது நாம் யோசித்தது உண்டா? சரி ஏன் அப்படி வாழைப்பழத்தை தொங்க விடுகிறார்கள் என்று பார்ப்போம்.
அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்பம் இருக்கிறது. என்றும் அன்புடன்
0 கருத்துகள்